ஊமைச் செந்நாய் படத்திற்காக கண்டெய்னருக்குள்ளேயே படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி

0
60

ஊமைச் செந்நாய் படத்திற்காக கண்டெய்னருக்குள்ளேயே படமாக்கப்பட்ட சண்டைக்காட்சி

LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரித்துள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடிக்கிறார். கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் புகழ்பெற்ற இவர் பர்மா, நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.

கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்னர் வெளியாகும் இவரது முதல் படம் இது.

குற்றம் கடிதல் படத்தில் நடித்த சாய் ராஜ்குமார் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தெகிடி, தலைவி படங்களில் கவனம் ஈர்த்த ஜெயக்குமார், எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை கல்யாண் வெங்கட்ராமன் கவனித்துள்ளார். இவர் சிபிராஜ் நடித்து விரைவில் வெளிவரவுள்ள ரேஞ்சர் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்

ஏ.ஆர்.ரகுமானின் கேஎம் இசைப்பள்ளி மாணவரான சிவா இந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அதுல் விஜய் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். பட்டினப்பாக்கம், ரிச்சி உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய இவர் தற்போது ஆரி நடித்துவரும் பகவான் படத்திலும் பணியாறியுள்ளார்.

துப்பறிவாளன் சுட்டுப்பிடிக்க உத்தரவு உள்ளிட்ட பல படங்களில் ஆக்சன் இயக்குனராக பணியாற்றிய தினேஷ் கார்த்திக் இந்தப்படத்தில். சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

ஆக்சனுக்கு முக்கியத்துவம் உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஒரு கன்டெய்னருக்குள்ளேயே நடக்கும் சண்டைக்காட்சியும் கிளைமாக்ஸில் சோளக்காட்டில் படமாக்கப்பட்டுள்ள ஆக்சன் காட்சியும் ஹைலைட்டாக இருக்கும்.

35 நாட்கள் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஊமைச் செந்நாய் என்கிற தலைப்புக்கு ஏற்றபடி இந்தப்படம் க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ளது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

நடிகர்கள் ; மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, சாய் ராஜ்குமார், கஜராஜ், ஜெயகுமார், அருள் டி சங்கர் மற்றும் பலர்

தயாரிப்பு ; LIFE GOES ON PICTURES

இயக்குநர் ; அர்ஜூன் ஏகலைவன்

ஒளிப்பதிவு ; கல்யாண் வெங்கட்ராமன்

இசை ; சிவா

படத்தொகுப்பு ; அதுல் விஜய்

சண்டைப்பயிற்சி ; தினேஷ் காசி

மக்கள் தொடர்பு ; A.ஜான்