ஊடகங்களுக்கு அதிர்ச்சி அளித்த ராகுல் ப்ரீத் சிங்

0

ஊடகங்களுக்கு அதிர்ச்சி அளித்த ராகுல் ப்ரீத் சிங்

ராகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் நடித்து அசத்தி வருபவர். இவர் தற்போது பொலிவூட் படங்களில் நடிப்பதிலேயே மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இந்நிலையில் ராகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார், அதில் அவரிடம் நீங்கள் நடிகர் ராணாவை காதலித்தீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘அட போங்க, நான் ராணாவுடன் தோழியாக தான் பழகினேன், ஆனால், நான் தோழியாக இருந்த போது அவர் ஒரு நடிகையை காதலித்தார் என்பது உண்மை’ என்று ஒரு அதிர்ச்சி கொடுத்து சென்றுவிட்டார்.

தற்போது அந்த நடிகை யார் என்று ஊடகங்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.