உலகின் சிறந்த ஆயிரம் படங்களின் பட்டியல் வெளியீடு – டாப் 3-ல் இடம்பெற்ற சூரரைப் போற்று

0
14

உலகின் சிறந்த ஆயிரம் படங்களின் பட்டியல் வெளியீடு – டாப் 3-ல் இடம்பெற்ற சூரரைப் போற்று

உலகளவிலான ஐஎம்டிபி தரவரிசை பெற்ற 1000 படங்களில் சூர்யாவின் ’சூரரைப் போற்று’ அதிகப் புள்ளிகளைக் குவித்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில், தீபாவளியையொட்டி வெளியான ’சூரரைப் போற்று’ சூப்பர் ஹிட் அடித்தது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் இருந்து சிலப் பகுதிகளை எடுத்துக்கொண்டு தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்ட்டு அங்கும் கொண்டாடப்பட்டது. சினிமாத்துறையினர் மட்டுமல்ல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட அரசு துறையினர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினரும் பாராட்டித் தள்ளினார்கள்.

ஆஸ்கார் பட்டியலிலும் ’சூரரைப் போற்று’ இடம்பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தது. தற்போது மற்றொரு பெருமையாக, உலக சினிமா தகவல்களையும் படங்களுக்கு மக்கள் அளிக்கும் ரேட்டிங்ஸ்கையும் கொண்ட பிரபல ஐஎம்டிபி இணையதளத்தில் உலகளவிலான அதிக புள்ளிகளைக் குவித்த 1000 படங்களின் தரவரிசைப் பட்டியலில் சூரரைப் போற்று 9.1 புள்ளிகளைக் குவித்து மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.