உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு!

0

உலகமெங்கும் தனுஷின் அசுரன் அக்டோபர் 4 முதல் வெளியீடு!

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் அசுரன். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்துள்ளார்.

இவர்களுடன் அம்மா அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி  சக்திவேல், பிரகாஷ்ராஜ் , கென் கருணாஸ் , பசுபதி ,சுப்ரமணியசிவா, பவன் ஆடுகளம் நரேன் , நித்திஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .ராமர் படத்தொகுப்பினை கையாண்டுள்ளார், கலை இயக்கம் ஜாக்கி , சன்டை பயிற்சி பீட்டர் ஹெய்ன்.

இப்படம்  தணிக்கையில் U/A சான்றிதழை பெற்றுள்ளது. அக்டோபர் 4ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது.
#AsuranAudioLaunch #Asuran