உறவுன்னு பாத்தா அப்பன் மவன்டா – உரசிப் பாக்க ஜில்லாவுலயே எவன்டா: நேரடியாக ஓடிடியில் மோதிக் கொள்ளும் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ – சசிக்குமாரின் ‘எம்ஜிஆர் மகன்’
சசிக்குமார் நடிப்பில் சமீபத்தில் ‘உடன்பிறப்பே’ அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ பொன்ராம் இயக்கத்தில் சசிக்குமார் நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ தீபாவளியையொட்டி நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது. சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாளினி ரவி நடிக்கிறார். சத்யராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள, இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனாவால் தள்ளிப்போனது.
இந்த நிலையில், வரும் தீபாவளியையொட்டி, நவம்பர் 4 ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இதனை, உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். தீபாவளியையொட்டி சூர்யாவின் ‘ஜெய் பீம்’ நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
உறவுன்னு பாத்தா அப்பன் மவன்டா
உரசிப் பாக்க ஜில்லாவுலயே எவன்டா!#MGRMaganOnHotstar streaming from 4th Nov only on @DisneyPlusHS #DisneyPlus @SasikumarDir @Screensceneoffl @mirnaliniravi @thondankani @senthilkumarsmc @sidd_rao @vivekharshan @onlynikil @turmericmediaTM pic.twitter.com/cgK1bVa9vE— ponram (@ponramVVS) October 20, 2021