உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயனுக்கு வாழ்த்துகள் – இயக்குநர் பாரதிராஜா
தமிழ் சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையாக விளங்குபவர் கமல்ஹாசன். நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையோடு பல சாதனைகள் படைத்தும் உலக அரங்கில் இந்திய சினிமாவின் முகமாகவும் விளங்கி வருகிறார்.
தொழில்நுட்பம், கதை சொல்லல் உத்தி என பல்வேறு புதுமைகளை படைத்த கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி 61 ஆண்டுகள் நிறைவடைந்ததை 61 years of kamalism என்கிற Hash Tag மூலம் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து பல்வேறு தொழில் நுடபங்கள், பல நூறு காதாபாத்திரங்கள், உடலை வருத்தி உச்சம் தொட்ட உலக நாயகன் என் கமலுக்கு வாழ்த்துக்கள் என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்திய திரை உலகில் அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்து
பல்வேறு தொழில் நுடபங்கள், பல நூறு காதாபாத்திரங்கள்,
உடலை வருத்தி
உச்சம் தொட்ட
உலக நாயகன்
என் கமலுக்கு
வாழ்த்துக்கள் @ikamalhaasanஅன்புடன்
பாரதிராஜா pic.twitter.com/uhVRiEqmUr— Bharathiraja (@offBharathiraja) August 12, 2020
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி உள்ளிட்ட படங்கள் பாரதிராஜா-கமல்ஹாசனின் வெற்றிக்கூட்டணியில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.