உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என்றும் என்னுடன் வாழும் – எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த இரங்கல்

0
103

உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என்றும் என்னுடன் வாழும் – எஸ்.பி.பி மறைவுக்கு ரஜினிகாந்த இரங்கல்

உங்கள் குரலும், உங்கள் நினைவுகளும் என்றும் என்னுடன் வாழும் என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5-ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல்வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுவந்தநிலையில், நேற்றுமுதல் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

நேற்று, மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் அவரது உடல்நிலையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.