இளையதளபதி விஜய்யின் அடுத்த படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

0

இளையதளபதி விஜய்யின் அடுத்த படம் இன்று பூஜையுடன் ஆரம்பம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் `தளபதி 62′ படத்தின் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படம் இன்று பூஜையுடன் ஆரம்பமாகிறது. பூஜையை அடுத்து, தொடர்ந்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெயரிடப்படாத இந்த படத்தில் இளையதளபதி விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இளையதளபதி விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைவது ரசிகர்ளிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.