இரு நண்பர்களின் கதை “பூதமங்கலம் போஸ்ட்”
அந்த கிராமத்தில் இரு நண்பர்களும் உயிருக்கு உயிராய் பழகிவந்தனர். இவர்களின் நட்பை ஊரே வியந்து பார்த்தது. இந்த நட்புக்குள் விதி புகுந்தது அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக்கொண்டனர். இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் படம் தான் சி.சி.வி.குரூப்ஸ் சார்பில், பொன் கோ. சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன் கோ விஜயன் மூவரும் இணைந்து தயாரித்துள்ள படமான ” பூதமங்கலம் போஸ்ட்” பதில் தரும்.
சென்னை, தண்டலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் வளர்ந்துள்ள இதில், விஜய் கோவிந்தசாமி, ராஜன் மலைச்சாமி, அஸ்மிதா, மோனிகா ரெட்டி, ராட்சசன் பசுபதி, மாஸ்டர் தக்சித் தேவேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
பிரேம்குமார் ஒளிப்பதிவையும், அர்ஜுன்—-கே.ஆர்.கவின் இருவரும் இணைந்து இணைந்து இசை மீட்ட, கவிஞானி பிறைசூடன், புதுக்கோட்டை பிகே சேகர் பாண்டியன் இருவரும் பாடல்கள் எழுத, ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பையும், ஜாய் மதி நடன பயிற்சியையும், நாக் அவுட் நத்தா சண்டை பயிற்சியையும் கவனித்துள்ளனர்.
கதை , திரைக்கதை, வசனம் எழுதி நடித்து தனது மூன்றாவது படமாக இயக்கி உள்ளார் ராஜன் மலைச்சாமி.