இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

0

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரை விமர்சனம்

உலகப் போரின் போது கடலில் தூக்கி எறியப்பட்;;ட குண்டு ஒன்று மாமல்லபுரத்தில் கரை ஒதுங்குகிறது. போலீஸ்; அதிகாரி தகவல் அறிந்து மீடியாக்களுக்கு தெரியாமல் அந்த குண்டை கைப்பற்றி  போலீஸ் நிலையத்தில் வைக்கிறார். அதே சமயம் இந்த குண்டை எப்படியாவது கைப்பற்றி உயிர்கள் பலியாகாமல் காப்பாற்ற நினைக்கும் பத்திரிகையாளர் ரி;த்விகாவும் அந்த குண்டை தேடுகிறார்.  அன்றிரவே திருடன் ஒருவன் அந்த குண்டை போலீஸ் நிலையத்திலிருந்து திருடி இரும்புக் கடையில் போட்டு விடுகிறான்.

அந்த இரும்புக்கடை முதலாளியான மாரிமுத்து தன்னிடம் வேலை செய்பவர்களிடம் ஈவு இரக்கமின்றி கடுமையாக நடந்து கொள்கிறார். அவரிடம் லாரி டிரைவராக வேலை  செய்யும் தினேஷ் சொந்தமாக லாரி வாங்கி தனியாக போய் விட வேண்டும் என்று திட்டம் போட்டு பணம் சேர்க்கிறார். தினேஷ் படித்து வேலைக்கு செல்லும்; ஆனந்தியை காதலிக்கிறார். சாதி பாகுபாடு காரணமாக இந்த காதலை ஆனந்தியின் குடும்பம் வெறுப்பதோடு எப்படியாவது இந்த காதலை பிரித்து திருமணம் செய்து வைத்து விடவேண்டும் இல்லையென்றால் ஆணவக் கொலை செய்து விடவும் முயற்சிக்கின்றனர்.

இதனிடையே தினேஷ் கடைசியாக பாண்டிச்சேரிக்கு இரும்பு சாமான்களை ஏற்றிக் கொண்டு சரக்கை சேர்த்து விட்டு வேலையை விட்டு நின்று விடலாம் என்று முடிவு செய்கிறார். அந்த இரும்பு சாமான்களோடு குண்டும் பாண்டிச்சேரிக்கு பயணமாகிறது. அங்கே இரும்பு சரக்கை இறக்கும் போது குண்டு என்று தெரிந்து மேலதிகாரி தினேஷிடமே திருப்பி கொடுத்து விடுகிறார். அந்த குண்டை போலீஸ் தேடுகிறது என்பதை அறிந்து கொள்ளும் தினேஷ் எப்படியாவது குண்டை எங்கேயாவது புதைத்து விட்டு ஒடி விடலாம் என்று நினைக்கிறார். குடும்பத்தின் எதிர்ப்பை மீறி ஆனந்தியும் தினேஷை தேடி பாண்டிச்சேரிக்கு செல்கிறார். இறுதியில் தினேஷ் குண்டை என்ன செய்தார்? அதனால் எற்பட்ட விளைவுகள் என்ன? பத்திரிகையாளர் ரித்விகா தினேஷிடம் இருக்கும் குண்டை கண்டுபிடித்தாரா? போலீசிடமிருந்து தினேஷ் தப்பித்தாரா? தினேஷ்-ஆனந்தி காதல் கைகூடியதா? என்பதே மீதிக்கதை.

தினேஷ் இரும்புக் கடை லாரி டிரைவர் செல்வமாக வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார். லாரி டிரைவர்களின் நடவடிக்கைகளையும் தோற்றத்தையும் பிரதிபலிப்பதோடு கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து நடிக்கும் நல்ல நடிகர் என்பதை மீண்டும் ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார்.

தயாரிப்பாளார் பா.ரஞ்சித்தின் ஆஸ்தான நாயகியான கயல் ஆனந்தி காதலி சித்ராவாக காதலிப்பதிலும் சரி, சீருவதிலும் சரி, சிணுங்குவதிலும் சரி அசத்தி விடுகிறார்.

பத்திரிகையாளர் தானியாவாக ரித்விகா குண்டை எப்படியாவது கண்டு பிடித்து விட வேண்டும் என்று தன் தோழியோடு பயணிக்கும் காட்சிகளும், வில்லன்களிடமிருந்து தப்பித்து ஒடுவதிலும் சரி, துணிச்சலான பெண்ணாக இறுதி வரை போராடுகிறார்.

பஞ்சராக முனிஸ்காந்த் முதலில் நெகடிவ்வாக தெரிந்தாலும், காட்சிகள் மாற மாற காமெடியாகவும், அப்பாவியாகவும் தவிக்கும் தவிப்பு சிரிக்க வைக்கிறது.

இரும்பு கடை முதலாளியாக மாரிமுத்து, தரகராக ஜான் விஜய், தினேஷ் நண்பராக ரமேஷ் திலக், திருடனாக ஜானி, போலீசாக லிஜிஷ் ஆகியோர் திரைக்கதையோடு பயணித்து படத்தின் வெற்றிக்கு துணை போகிறார்கள்.
இரும்புக்கடை வியாபாரம், லாரி சவாரி, குண்டு இடம் மாறும் தறுணங்கள், மாமல்லபுரம் முதல் பாண்டிச்சேரி வரை பயணம், இடையே கிராமத்து காதலின் அழகு என்று கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் அழகு சேர்கிறது.

உயிரோட்டமான இசையில் கலக்கியிருக்கிறார் தென்மா.
ஸ்டன்னர் சாமின் சண்டை, செல்வாவின் எடிட்டிங், கலை இயக்குனர் ராமலிங்கம் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை சேர்கிறது.

இயக்கம் அதியன் ஆதிரை. படம் தொடங்கும் போது இரண்டாம் உலகப்போரின் குண்டைப் பற்றி சிறு ஆவணக்குறிப்பு படத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை குண்டு வெடிக்குமா என்ற எண்ண ஒட்டத்தோடு எடுத்துச் செல்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை. கதாபாத்திரங்களின் தேர்வு, காதல், குடும்ப சென்டிமெண்ட், சாதி பிரிவினை, போலீஸ் தேடல், கொஞ்சம் காமெடி, போராட்ட களம் கண்ட பத்திரிரையானர், அரசியல் நெடி கலந்து குண்டை மையப்படுத்தி நெடும் பயணத்தில் நல்லதொரு வெற்றிக்கனியை ஈட்டி அழுத்தமான முத்திரையை பதித்திருக்கிறார் இயக்குனர் அதியன் ஆதிரை.

மொத்தத்தில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு வெற்றி கூட்டணியில் வெடித்து சிதறியிருக்கும் அணுகுண்டு.