இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்…!

0
1

இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்…!

இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியும், வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோரின் தாயாருமான மணிமேகலை நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.

உடல்நலக்குறைவால் மணிமேகலை சென்னையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்றிரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவு நண்பர்கள், உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

தாயாரின் மறைவால் வாடும் இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன் இருவரும் திரையுலகினர் ஆறுதல் கூறி வருகின்றனர்.