இயக்குனர் பொன்ராம் அவர்கள் வெளியிட்ட ஜெட்டி திரைப்படத்தின் முதல் பார்வை
நவீனமான இந்த நூற்றாண்டிலும் , கலாச்சாரம் , கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன . அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் ஜெட்டி !.. கடல்சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டி , அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல் , அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் ஜெட்டி !இதில் நந்திதா சுவேதா , புதுமுகம் மான்யம் கிருஷ்ணா , கிஷோர் , மைம் கோபி , சுமன்ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர் . ” ஜில் ஜில் ஜில் ” என்ற இளமை துள்ளலான பாடலுக்கு சிறப்பாக ஆடி இருக்கிறார் தேஜாஸ்வினி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிகமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறார் தயாரிப்பாளர் கே . வேணு மாதவ் , ஒரே ஒருமுறை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி கொரோணா காலத்திலே படம் எடுக்க வைத்து , திரைக்கதை எழுதி , யதார்த்தமாக இயக்கி இருக்கிறார் அறிமுக இயக்குனர் பி . சுப்பிரமணியம்.பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் இணை ஒளிப்பதிவாளர் வீரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார் . இயக்குனர் பி.வசுவின் உதவியாளர் தி.ரமேஷ் பிரபாகரன் வசனம் எழுதி இருக்கிறார் .
கார்த்திக் கொடக்கன்ட்லாவின் இசையில் அத்தனை பாடல்களையும் கவிஞர் டாக்டர் கிருதியா எழுதியுள்ளார் .
விஜய் பிரகாஷ் ,விஜய்யேசுதாஸ் பாலக்காடு ஸ்ரீராம் , ஸ்ரீகாந்த் ஹரிஹரன் , வைக்கோம் விஜயலக்ஷ்மி பத்மஜா , ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர் .
வின்சன் C. M PRO
சமிபத்தில் இயக்குனர் பொன்ராம் அவர்கள் தன்னுடைய அடுத்த படமான எம்ஜிஆர் மகன் வெளியீடு வேலைகளில் இருந்த போதிலும் தன்னுடைய பொன்னான நேரத்தை ஒதுக்கி தன்னுடைய பொற்கரங்களால் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார்.
Here are the Looks of #Jetty ⭐ing @MaanyamKrishna @Nanditasweta in the lead roles, A Film abt the life of people living near sea side#JettyFirstLook#SubrahmanyamPitchuka #VenuMadhav #VardhinProductions @Karthik_Kodaks @Veeramani_DOP @vijaiMuthupand1 @Winsun_PRO @LahariMusic pic.twitter.com/VUFpkm4p5l
— ponram (@ponramVVS) October 13, 2021