இயக்குநர் ராஜா இயக்கும் க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா

0
133

இயக்குநர் ராஜா இயக்கும் க்ரைம் த்ரில்லரில் நடிக்கும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா, ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார். அடுத்து தமிழ் சினிமாவில் கால் பதிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்குடன் சேர்ந்து பிரண்ட்ஷிப் படத்தில் நடித்தார். தற்போது அடுத்த படத்திற்கும் அவர் தயாராகிவிட்டார்.

புதுமுக இயக்குநர் ஜேஎம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்க லாஸ்லியா ஒப்பந்தமாகியுள்ளார். சுதந்திரமான திரைப்பட இயக்குநரான அவர்,  நான் பல ஆண்டுகளாக சினிமா உலகில் இருந்து வருகிறேன். பல திரைக்கதைகளை உருவாக்குவதில் பணியாற்றியுள்ளேன். பதினோராம் வகுப்பு படிக்கும்போதிருந்தே ஸ்கிரிப்ட் எழுதிவருகிறேன் என்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கதை, திரைக்கதையில் திறமைசாலியான இயக்குநர் ராஜா, ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்குவதற்குத் தயாராகிவருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக லாஸ்லியாவும், நாயகனாக நாடகங்களில் அனுபவம் பெற்ற புதுமுக நடிகர் கே. பூரணேசும் நடிக்கிறார்கள்.  தமிழ் ரசிகர்களிடம் லாஸ்லியாவுக்கு நல்ல அறிமுகம் இருப்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். விரைவில், படத்திற்கான மற்ற நடிகர்களும் முடிவு செய்யப்படுவார்கள் என்கிறார் இயக்குநர்.