இன்ஸ்டாகிராம் இளவரசி + காமெடி கிங்.. கோம்போவால் அனல் பறக்க போகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!

0
65

இன்ஸ்டாகிராம் இளவரசி + காமெடி கிங்.. கோம்போவால் அனல் பறக்க போகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்!

நகைச்சுவையால் அனைவரையும் பெரும் அளவில் ஈர்த்து தன் கைவசம் வைத்திருப்பவர் தான் வடிவேலு. தற்போது லைகா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப்போவது என பல தகவல்கள வெளியான.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனங்களை கவர்ந்து, இன்ஸ்டாகிராம் இளவரசியாக இருக்கும் ஷிவானி நாராயணன் தான் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக, அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடிவேலுடன் இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

இதனை கண்ட அவரின் ரசிகர்கள், எங்க தலைவனோட நடிக்க கொடுத்து வச்சிருக்கணும் என்றும் கலக்குங்க ஷிவானி என்று ஏகப்பட்ட கமெண்டுகள் குவிந்து வருகின்றன.