இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோவை பகிர்ந்த அமலா பால்!
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் திருமண வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். தொடர்ந்து அவர், விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். அதோடு தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ‘தெய்வதிருமகள்’, ‘தலைவா’ ஆகியப் படங்களில் நடித்த அமலா, அவரையே காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். இவர்களின் திருமணம் கடந்த 2014-ம் ஆண்டு நடந்தது. திருமணம் நடந்த கையோடு வெகு விரைவில் விவாகரத்தும் பெற்றனர். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் விவாகரத்து செய்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன.
திருமண முறிவுக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால். இதற்கிடையே அவர் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும், விரைவில் திருமணம் என்றும் கடந்த சில வருடங்களாகவே வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் தற்போது அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது யாருடைய திருமண வீடியோ என யோசிக்க வேண்டாம்.. அமலாவின் தம்பி அபிஜித்திற்கு தற்போது திருமணம் நடந்துள்ளது. அந்த வீடியோவை தான் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
https://www.instagram.com/reel/CUplv5illLN/?utm_source=ig_web_copy_link