இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

0
41

இன்ஷா அல்லாஹ் விமர்சனம்

இஸ்லாம் மார்க்க நெறிமுறைகளான ஐந்து கடமைகளை செய்யும் ஒரு முதியவர், அவரின் பெயரால் பல இலவச பள்ளிகள், மதராசா போன்றவை இயங்க அவர் இறக்கும் போது அனைவரும் பிராதித்து இறுதி சடங்கு செய்ய, சொர்க்கத்திற்கு செல்கிறார். அதே சமயம் இன்னொரு பணக்காரர் தன் சொந்தங்களை ஏமாற்றி ஐந்து கடமைகளை செய்ய தவறுவதால், இறக்கும் தருவாயில் யாரும் கவனிக்க ஆளில்லாமல் அவதிப்பட, இறந்த பிறகு அவரின் பாவத்தால் நரகத்திற்கு செல்கிறார். இவர்களின்; கதைக்களத்தோடு, அனைத்து வயதுடைய பல ஜோடிகளின் காதல், வாழ்க்கையை சித்தரித்து, வறுமையிலும் இனிமை காண்பதை விவரிப்பபதோடு, அனைத்து ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் மறுவாழ்விற்கு இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் புதிய சமுதாயம் இஸ்லாமிய அறக்கட்டளை பற்றியும், அனைத்து மரணங்களுக்கும் இலவச ஜீவ சாந்தி அறக்கட்டளை உதவி செய்வதையும் காட்டி வேற்றுமையில் ஒற்றுமையோடு இந்தியாவில் வாழ்கின்றனர் என்பதை சொல்லியிருப்பதே சாரம்சம்.

இதில் மோகன், மேனகா, நம்பிராஜன், பகவதி அம்மாள், அப்துல் சலாம், நரேன் பாலாஜி ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பக்க துணையாக உள்ளது.

டி.எஸ்.பிரசன்னாவின் ஒளிப்பதிவு சில இடங்களில் லாங் ஷாட்டில் பிரமிக்க வைக்கிறது, சில இடங்களில் அமைதியான நின்று சோதிக்கிறது. எதற்காக சில காட்சிகள் வந்து போகின்றது என்பதும் புரியாத புதிர்.

இஸ்லாமிய வாழ்வியலை ஒரு முழு படத்தில் காண்பது இதுமே முதன் முறை என்பதால் பல இடங்களில் காட்சிகள் தட்டு தடுமாறுவதும், எதற்கு யார் வருகிறார்கள், என்ன பேசுகிறார்கள் எதற்காக மௌனமாக கடந்து செல்கிறார்கள் என்பதை பல கேள்விகளுக்கு புதிராக பதில் எழுதிக் கொள்ளுங்கள் என்று சொல்லி கற்பனை வளத்துடன் சிந்திக்கும்படி அறிவுறையோடு இது என்னுடைய ஸ்டைல் என்று சொல்லி கடந்து சென்று விடுகிறார் இயக்குனர் சீர்காட்சி பக்கிள் பாண்டியன் பாஸ்கரன்.

கதை-தோப்பில் முகம்மது மீரான், பிர்தவுஸ் ராஜகுமாரன், ஒலிப்பதிவு-செந்தில் குமரன் சண்முகம், கலை-இளங்குமரன், ஆடை-தக்சா அமுதன், இணைதயாரிப்பு-கோவை இப்ராஹ{ம் இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பல சர்வதேச விருதுகளையும், பல சர்வதேச படவிழாவில் பங்கேற்க தேர்வாகியுள்ளது என்பது கூடுதல் தகவல்.