இன்று மாலை வெளியாகும் வலிமை விசில் தீம்

0
136

இன்று மாலை வெளியாகும் வலிமை விசில் தீம்

இன்று மாலை ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகவுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ பொங்கலையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்று ‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கெனவே, இயக்குநர் விக்னேஷ் சிவன் வரிகளில் ‘நாங்க வேற மாரி’, ‘நான் பார்த்த முதல் முகம் நீ’ பாடல்கள் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது விசில் தீமிற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

எப்போதும் அஜித்-யுவன் கூட்டணி என்றால் பிஜிஎம்மும், தீம் மியூசிக்கும் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. அதற்கு, ‘பில்லா’, ’மங்காத்தா’ படங்களின் இசையே பெரும் சாட்சியாய் உள்ளது. இந்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு விசில் தீம் வெளியாவதாக சோனி மியூஸிக் அறிவித்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக, ஹீமா குரேஷியும் வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள்.