இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ

0
67

இணையத்தை கலக்கும் புஷ்பா மேக்கிங் வீடியோ

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்கள் பலரின் முணுமுணுப்பாக மாறியது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் புஷ்பா கதாப்பாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு, அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அனைவராலும் பாராட்டப்பட்ட புஷ்பா எப்படி உருவாகிறான் என்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.