இணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்!

0
152

இணையத்தில் வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண அழைப்பிதழ்!

நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கு அவரது காதலன் விக்னேஷ் சிவனுடன், வருகிற ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்த நிலையில், தற்போது திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இருவருக்கும் ஜூன் 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், தற்போது திருமண இடத்தை அவர்கள் மாற்றி வைத்துள்ளனர்.

150 விருந்தினர்கள் கூட திருமணத்தில் கலந்து கொள்ள திருப்பதி கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்பதால் திருமண இடத்தை மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சென்னை, மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகியுள்ளது.

திருமண அழைப்பிதழ், வீடியோ வடிவிலும் வெளியாகி உள்ளது. அதுவும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.