இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவிப்பு! 29 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதும் பெற்றுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இடையே 1995 ஜனவரி 6 ஆம் தேதியன்று திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.
இருவரும் ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு சிறந்த ஜோடிகள் என்ற பாராட்டை பெற்றிருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத திருப்பமாக கணவர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக 29 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக சாய்ரா பானு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் இந்த விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.