ஆறாம் நிலம் விமர்சனம்

0
5

ஆறாம் நிலம் விமர்சனம்

உள்நாட்டுப் போருக்கு பின்னரான காலப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இளம் தாயை, மையமாக கொண்டு இந்தப் படம் சுழல்கிறது. கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலத்தில் மரண பயத்தோடு அதனை அகற்ற வேலை செய்யும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை எப்போழுதுமே நெருக்கடிகளையும், சவால்களையும் சந்தித்து பயணப்பட எவ்வளவு கடினமாக இருக்கிறது என்பதை ஒரு தாயின் பார்வையில் தன் மகள், மாமியார் என்று அவர்களை அரவணைத்து தன் கணவனை  தேடி அலையும் ஒரு அபலைப் பெண்ணின் கதையை ஈழ பின்னணியோடு அவலங்களையும் சிறப்பாக மையப்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் நவயுகா, ராஜ்குமார், பாஸ்கி, மன்மதன், ஜீவேஸ்வரன், தமிழரசி, தமிழ் கவி என்று பண்முகங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி சிறப்பாக நடித்துள்ளனர்.
இசை-சித்தங்கா ஜெயகொடி, எடிட்டர்-சஜித் ஜெயக்குமார், ஒளிப்பதிவு-சிவசாந்தகுமார் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள்.

போருக்கு பின்னால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல் தவிக்கும் சாதாரண மனிதர்கள், சமூகத்தில் இயன்ற வரை போராடி பெற துடிக்கும் சின்ன சின்ன உரிமைகள் என்று காட்சிக்கு காட்சி சம்பவங்களை கோர்வையாக கொடுத்து அவர்களின் வாழ்வியலை சித்தரித்த விதம் அருமை. படம் முழுவதும் இயக்குனர் ஆனந்தரமணனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. அவரது கடின உழைப்பிற்கும், திறமைக்கும், யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கும் நிறைய விருதுகள் கிடைக்கும். இறுதிக்காட்சியை சிறப்பாக முடித்துள்ளனர்.

மொத்தத்தில் ஐபிசி தமிழ் தயாரித்து ஐபிசி யூ டியூப் சேனலில் ரிலீஸ் ஆகும் திரைப்படம் ஆறாம் நிலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவராலும் பாராட்டப்படும்.