‘ஆத்தா’வை கைவிட்டார் பாரதிராஜா

0
13

‘ஆத்தா’வை கைவிட்டார் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா கடைசியாக இயக்கி நடித்த படம் மீண்டும் ஒரு மரியாதை. பாரதிராஜாவுடன் ஜோ மல்லூரி, மவுனிகா, நக்‌ஷத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார். 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திரைப்படம் திரைக்கு வந்தது.

இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பாரதிராஜா ‘ஆத்தா’ என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். பாரதி கிருஷ்ணகுமாரின் கதையை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்த பாரதி 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் கொரோனா நெருக்கடி காரணமாக படத்தின் தயாரிப்பு பணிகள் தடைபட்டன.

இந்நிலையில் இந்தப் படம் கைவிடப்பட்டதாக பாரதிராஜா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது, “15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால்.

உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின்கருவை நாடியுள்ளது ஆத்தா.

இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும்,தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால்,ஆத்தா கைவிடப்படுகின்றன. புதிய அறிவிப்பு ,புதிய தலைப்புடனும், புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன் மிக விரைவில் அறிவிக்கப்படும்
என தெரிவிக்கப்படுகிறது” இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.