‘ஆதிபுருஷ்’ படத்தில் இணையும் ‘பெண்குயின்’ ஒளிப்பதிவாளர்

0
102

‘ஆதிபுருஷ்’ படத்தில் இணையும் ‘பெண்குயின்’ ஒளிப்பதிவாளர்

சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பெண்குயின்’. கார்த்திக் சுப்புராஜ் வழங்க கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம்,  ஜெயராம் தயாரித்திருந்த இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தின் கதைக்கு தன் ஒளிப்பதிவால் உயிரூட்டியிருந்தார் கார்த்திக் பழனி. விமர்சகர்கள் பலருமே படத்தின் ஒளிப்பதிவைக் குறிப்பிட்டு மிகவும் பாராட்டு தெரிவித்திருந்தார்கள். மலைகள், காடுகள் என வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் பார்வையாளர்களுக்கு திகிலூட்டி இருந்தார் கார்த்திக் பழனி.

தற்போது ஒளிப்பதிவாளராக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறார் கார்த்திக் பழனி.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திக் பழனி. 3டி தொழில்நுட்பம், பிரம்மாண்ட தயாரிப்பு என உருவாகும் இந்தப் படத்துக்கு தன் ஒளிப்பதிவின் மூலம் மெருக்கூட்டவுள்ளார்.

இந்தப் படம் ஒளிப்பதிவாளராக தனது அடுத்தக் கட்டம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கார்த்திக் பழனி. ‘ஆதி புருஷ்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.