ஆண் குழந்தைக்கு தந்தையானார் ‘பிக்பாஸ்’ புகழ் நடிகர் ஆரவ்
கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஆரவ். அந்த சீசனின் நடிகை ஓவியாவால் காதலிக்கப்பட்டு இன்னும் பிரபலமானார். ‘ஓ காதல் கண்மணி’, ‘சைத்தான்’ உள்ளிட்டப் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ மூலம் ஹீரோவானார்.
இவருக்கும் நடிகை ராஹேவுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் ஆரவ்-ராஹே தம்பதிகளுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்று நடிகர் ஆரவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.