“ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்”

0
15

“ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள்”

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன..

இந்நிலையில் “ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார்.

மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது, அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது. ஏப்ரல் அல்லது மே ல் இது திறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறை கொரோனா காலத்தால் பெரும் அளவில் சோர்ந்து போயுள்ளது . ஆனால் திரையரங்கங்கள் மீண்டும் திறக்கப்படும் போது, தேக்கி வைக்கப்பட்டுள்ள படைப்புகள் வெளியாகும், சிறந்த படங்கள், எதிர்பார்த்த படங்கள் வெளிவரும் போது சினிமா துறை மீண்டும் புத்துயிர் அடையும், என திரு.முருகானந்தம் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.