ஆங்கிலத்தில் தலைப்பு: சர்ச்சையில் விஜய்யின் ‘பீஸ்ட்’!

0
152

ஆங்கிலத்தில் தலைப்பு: சர்ச்சையில் விஜய்யின் ‘பீஸ்ட்’!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பீஸ்ட்’ என்ற டைட்டில் கொடுக்கப்பட்டு  பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளிவந்தது . இதனை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழுனர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பீஸ்ட்’ என்ற தலைப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்து. இந்த தலைப்பை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . மேலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விஜய் பட தலைப்பு ட்ரெண்டானது. ஆனால் அந்த தலைப்பே தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் இயக்குனர்கள் திரைப்படங்களுக்கு தமிழ் அல்லாத மொழிகளிலும் தலைப்பு வைத்து வருகின்றனர். இதை இவ்வளவு நாள் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தற்போது விஜய் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள பீஸ்ட் என்ற தலைப்பு விவாதத்தை தொடக்கியுள்ளது. குறிப்பாக இதற்கு முன் விஜய் நடித்த சர்கார், பிகில், மாஸ்டர் ஆகிய படங்களுக்கும் தமிழ் அல்லாத மொழியில் தலைப்பு வைத்துள்ளானர் என பொது தளத்தில் உள்ளவர்களும், ரசிகர்கள் அல்லாத நடுநிலையாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் விஜய் தலையிட்டு தலைப்பை தமிழில் வைக்க வலியுறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விஜய் படம் தவிர சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர், டான், விக்ரம் நடிக்கும் கோப்ரா உள்ளிட்ட பல படங்களுக்கும் தமிழ் அல்லாத மொழிகளில் தலைப்பு வைத்துள்ளனர். அதையும் மாற்ற வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதேசமயம் தன்னுடைய கதைக்கு என்ன தலைப்பு வைக்க வேண்டும், வசனம் வைக்க வேண்டும் என்பது படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம். அதில் தலையிட்டு தலைப்பை மாற்ற சொல்வது, காட்சிகளை நீக்க சொல்வது கருத்து சுதந்திரத்தை நெரிக்கும் செயல் என்று சினிமா துறையினர் கூறுகின்றனர்.