அழியாத கோலங்கள் 2 திரை விமர்சனம்

0

அழியாத கோலங்கள் 2

திரை விமர்சனம் ரேட்டிங்

கவுரி சங்கர் (பிரகாஷ் ராஜ்) ஒரு பிரபல இலக்கிய எழுத்தாளர, கவிஞர். அவரது இல்லத்தரசி சீதா (ரேவதி) அவர் மீது ஏராளமான அன்பையும் கொண்டவர். கவுரி சங்கரின் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. கவுரி சங்கர் தனது விருதை பெற டெல்லிக்கு செல்கிறார். சாகித்ய அகாடமி விருது பெற்றவுடன் தனது மனைவிக்கு கூட தெரிவிக்காமல் அவசரமாக சென்னை திரும்பும் கவுரி சங்கர் தனது கல்லூரி; தோழி மோகனாவை (அர்ச்சனா) பார்க்க அவரது வீட்டிற்கு செல்கிறார். மோகனா கணவனை இழந்து தனியே வசிக்கிறார், 24 வருடங்களுக்கு பின் சந்திக்க வரும் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். இருவரும் தங்களது வாழ்க்கை அனுபவங்களை மனம் விட்டு பேசுகிறார்கள். எழுத்துலகில் தான் பெற்ற அத்தனை சிறப்புகளுக்கும் நீதான் காரணம் என்பதை சொல்கிறார்.இரவு உணவிற்குப் பிறகு, கவுரி சங்கருக்கு அன்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டு இறந்து விடுகிறார். கவுரி சங்கர் மோகனா வீட்டில் இறந்த செய்தி காட்டுத் தீ போல பரவுகிறது. ஊடகங்களும் போலீஸ்காரர்களும் அவரது கதவைத் தட்டுகிறார்கள். போலீஸ் மோகனாவை விசாரிக்கிறது, மக்கள் பார்வையில் மோகனா கள்ளகாதலியா என்கிற கேள்வி எழுகிறது. அதன் பின் மோகனா என்ன ஆனார்? அவரை இந்த சமூகம் எப்படி எடுத்துக்கொள்கிறது? கவுரி சங்கரின் மனைவி என்ன செய்யப்போகிறார்? என்பதே மீதிகதை.

எழுத்தாளராக பிரகாஷ்ராஜ், கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்.

கல்லூரி; தோழியாக அர்ச்சனா, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மனைவியாக ரேவதி, நடிகை ஈஸ்வரிராவ் செய்தியாளராகவும், நாசர் காவல்துறை அதிகாரியாகவும், விஜய் கிருஷ்ணராஜ், மோகன்ராம் ஆகியோரின் பங்களிப்பு சிறப்பு.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல், ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவும், அரவிந்த் சித்தார்த் இசையும், மு.காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பும் உணர்வுபூர்வமான கதைக்கு பலம் சேர்க்கிறார்கள்.

கமர்ஷியல் பார்முலாக்கள் என்று சினிமாவில் புகுத்தப்பட்ட அடிதடி, குத்து பாட்டு, காமெடி, டுயட் இவை எதுவும் இல்லாமல், நான்கே நான்கு கதாபாத்திரங்களை மையப்படுத்தி நட்பையும் காதலையும் தெளிவான திரைக்கதை மூலம் ஒரு அருமையான படமாக ‘அழியாத கோலங்கள்-2″ படைத்துள்ளார். சபாஷ் இயக்குனர் எம்.ஆர்.பாரதி.

மொத்தத்தில் ஈஸ்வரிராவ் – தேவசின்ஹாவுடன் இணைந்து வள்ளி சினி ஆர்ட்ஸ் வள்ளியம்மை அழகப்பன் தயாரித்துள்ள ‘அழியாத கோலங்கள்-2″ நட்பையும் காதலையும் புனிதப்படுத்தும்.

நம்ம பார்வையில் ‘அழியாத கோலங்கள் 2″ படத்துக்கு 3.5 ஸ்டார் தரலாம்.