அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்புகிறேன்”: தீபிகா படுகோனே

0
55

அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்புகிறேன்”: தீபிகா படுகோனே

நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே.

தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘கெஹ்ரையான்’ வெளியாகி கவலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், ஹிரித்திக் ரோஷனுடன் ‘பைட்டர்’, ஷாருக்கானுடன் ‘பதான்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார். ‘கெஹ்ரையான்’ வெளியீட்டையொட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில், ’எந்த நடிகருடன் நடிக்க விருப்பம்?’ என்று தீபிகா படுகோனேவிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு” நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்புகிறேன். நம்பமுடியாத அளவுக்கு ஆளுமையுடன் இருக்கிறார்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார் தீபிகா படுகோனே. சமீபத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பாலிவுட்டிலும் வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.