அரபிக்குத்து பாடலுக்கு ஷிவானி நாராயணன் கவர்ச்சி டான்ஸ் – வைரலாகும் வீடியோ!
கவர்ச்சி குத்தாட்டத்திற்கு பெயர் போன இன்ஸ்டாகிராம் இளவரசி ஷிவானி நாராயணன் அரபிக்குத்து பாடலுக்கு போட்டுள்ள ஆட்டம் சோசியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
பகல் நிலவு சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஷிவாணி நாராயணன். தன்னுடையை நடிப்பு மூலம் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
அதன்பின்னர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான இவருக்கு திடீரென அடித்தது யோகம். ஆமாங்க, ஷிவாணிய தேடி பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்திலும் ஷிவாணி நடித்து வருகிறார்.அதுலயும் குறிப்பாக நடிகர் வடிவேலுவில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஷிவாணி நடிக்க இருக்கிறார்.
நடிப்பு மட்டுமல்லாம சமூக வலைதளங்களிலும் அடிக்கடி ஆக்ட்டிவாக இருக்கும் ஷிவாணி, அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், பிரபல பாடல்களுக்கு நடமாடும் வீடியோவையும் பகிர்ந்து வருவார்.
இந்த வீடியோக்கள் வலைதளங்கள் முழுவதும் பரவி வட்டமிட்டு வந்தன. இந்தநிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு அப்படி ஒரு ஆட்டம் போட்டுருக்காங்க ஷிவாணி நாராயணன், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஷிவாணி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
அனிரூத் இசையில், சிவகார்த்திகேயன் வரிகளில் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியான அரபிக்குத்து பாடல் பட்டி, தொட்டி எல்லாம் கடந்து பாரீன் வரை கலக்கி வருகிறது. இதுவரை அரபிக்குத்து பாடலை 126 மில்லியன் பேர் கண்டுகளித்துள்ளனர், 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.