அரண்மனை 3 விமர்சனம் – த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் ஒரு திகில் விருந்து

0
80

அரண்மனை 3 விமர்சனம் – த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் ஒரு திகில் விருந்து

பரம்பரை ஜமீன்தாரான சம்பத் அரண்மனையில் தாயை இழந்த மகள் பேய் இருப்பதாக கூறுவதை நம்பாமல் அவளை சிறு வயதில் ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார். வருடங்கள் உருண்டோட பாசம் வைத்திருக்கும் கார் ஒட்டுனர் இறந்ததை கேள்விப்பட்டு ராஷி கண்ணா அரண்மனைக்கு திரும்புகிறார். சம்பத் மகளிடம் எப்பொழுதும் பாராமுகமாகவே நடந்து கொண்டு வெறுப்பை காட்டுகிறார். இதன் காரணம் புரியாமல் இருக்கும் ராஷி கண்ணாவிற்கு அரண்மனையில் பேயின் பயமுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. அத்தையின் மருமகனான சுந்தர்.சி தன் மகளை பார்க்க வரும் போது இதே பயமுறுத்தல் தன் மகளுக்கும் நடக்கிறது என்பதை உணர்கிறார். இதனால் இந்த இருவரை மட்டும் மிரட்டும் பேய் யார்? எதனால் இவர்களை குறி வைக்கிறது? அரண்மனையில் நடந்த மர்ம கொலை என்ன? இறுதியில் சுந்தர்.சி இவர்களை மீட்டாரா? ராஷி கண்ணா பிறப்பின் ரகசியம் என்ன? என்பதே க்ளைமேக்ஸ்.

ஆர்யா, சுந்தர்.சி, ராஷி கண்ணா, ஆண்ட்டிரியா, சாக்ஷி அகர்வால், சம்பத், விவேக், யோகிபாபு, மனோபாலா, வேலா ராமமூர்த்தி, மது சூதன் ராவ், வின்சென்ட் அசோகன், விச்சு விஸ்வநாத், குழந்தை ஓவி பந்தார்கர், நளினி, மைனா நந்தினி, சிறப்பு தோற்றத்தில் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் என்று அத்தனை பேரும் அரண்மனையை நிரப்பியிருக்கிறார்கள். படத்தில் சிறப்பு தோற்றம் என்று முக்கியமாக குறிப்பிட பட வேண்டியவர் ஆர்யா தான், இவருக்கான முக்கியத்துவம் படத்தில் இல்லை, ஒரு சில இடங்களில் பயமுறுத்த மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவு-யு.கே.செந்தில்குமார், இசை-சத்யா.சி இருவரும் த்ரில்லர் படத்திற்கு கேற்ற டெம்போவை கொடுத்து கை தட்டல் பெறுகின்றனர்.

திரைக்கதை-வெங்கட் ராகவன்,எடிட்டர்-பென்னி ஒலிவர், சண்டை-பீட்டர் ஹேயின், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்,கலை-குருராஜ், நடனம்-பிருந்தா தினேஷ், வசனம்-பத்ரி என்று தனித்தன்மையோடு தங்கள் திறமையை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
சுந்தர்.சி இயக்கும் அரண்மனை என்றாலே பிளாஷ்பேக் பின்னணியில் பிரம்மாண்ட பங்களா, அதற்குள்ளே பழி வாங்க துடிக்கும் ஆவிகள்,  இவற்றின் ஆக்ரோஷமான பயமுறுத்தலில் அடி வாங்கி அலறும் நகைச்சுவை கதாபாத்திரங்கள், அதை கட்டுப்படுத்தி அழிக்க திட்டம் தீட்டும் வல்லவர் என்பதும் பலவித குடும்ப செண்டிமெண்ட் கலந்து இறுதிக்காட்சியில் பயபக்தியுடன் கொடுப்பதில் கை தேர்ந்தவர் இயக்குனர் என்பதை மீண்டும் அரண்மனை மூன்றாம் பாக

மொத்தத்தில் ஆவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவீஸ் வெளியீட்டில் வந்துள்ள அரண்மனை 3 அனைத்து வயதினரும் கண்டு களிக்கும் த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும் ஒரு திகில் விருந்து.