‘அரண்மனை 3’ பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்

0
56

‘அரண்மனை 3’ பட ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டோம். அவர் கூறிய விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ‘அரண்மனை 3’ படத்திற்காக 12 அடி உயர லிங்கம் சிலை ஒன்றை செட் போட்டு படமாக்கி உள்ளனர்.

ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டை உண்மையான லிங்கம் சிலை என்று நினைத்து பொதுமக்கள் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தார்களாம். இதன் காரணமாக சில நாட்கள் ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஆனதாம். முன்னதாக ‘அரண்மனை 2’ படத்தின் ஷூட்டிங்கின்போதும், அப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலை செட் முன்பு, இதேபோல பொதுமக்கள் திரண்டு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.