அன்சார்டட் விமர்சனம் : ‘அன்சார்டட்’ மிளிர்கிறது

0
49

அன்சார்டட் விமர்சனம் : ‘அன்சார்டட்’ மிளிர்கிறது

சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் வீடியோ கேம் சீரிஸான ‘அன்சார்டட்” ஆக்சன் அட்வெஞ்சர் படமாக  திரைக்கு வந்துள்ளது.
டாம் ஹாலண்ட, மார்க் வால்பெர்க், சோபியா அலி, ஆண்டானியோ பெண்டாரஸ் மற்றும் பலர் நடிக்க படத்தை இயக்கியுள்ளார் ரூபென் ஃப்ளெச்சர். ரமின் ஜவாடியின் (Ramin Djawadi) பின்னணி இசையோடு சுங்-ஹ{ன்-சுங் (Chung-hoon Chung) ஒளிப்பதிவு செய்துள்ளார்.ரஃபே ஜட்கின்ஸ், ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹாலோவே திரைக்கதை அமைத்துள்ளனர். மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா.
உலகின் மிகப் பழமையான மர்மங்களில் ஒன்றான 500 ஆண்டுகளுக்கு முன்பான மான்காடா மாளிகையின் செல்வமான கூ5 பில்லியன் மதிப்புள்ள தங்கப்புதையலை அடைய மெஜல்லன் கடற்பயணம் (Magellan Expedition) குறித்த மேப் ஒன்றைத் திருட முற்படும்போது மாட்டிக் கொள்கிறார் சாம் டிரேக். மூத்த சகோதரன் சாம் டிரேக் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க,  தன் 10 வயது தம்பியான நாதன் டிரேக்கைப் பிரிந்து செல்ல பின்னர் நாதனுக்கு வெறும் போஸ்ட்கார்டுகள் மட்டுமே வந்து சேருகின்றன. 15 வருடங்கள் கழித்து, பார்டெண்டராக வேலை செய்யும் நாதனுக்கு, சாமின் நண்பர் விக்டர் சல்லிவன் அறிமுகமாக சாம் டிரெக் விட்டுச் சென்ற மெஜ்ஜலன் கடற்பயணத்தின் புதையலைத் தேடும் சாகசப் பயணம் மேற்கொண்டு கண்டுபிடிக்கலாம் என்றும் நம்பிக்கைத் தருகிறார். இருவரும் தங்களின் சாகசத்தைத் தொடங்க, இவர்களுடன் தோழி க்ளோயி சேர்ந்து கொள்ள, இந்த பயணம் மிகப்பெரும் அட்வென்சராக மாறுகிறது. மான்காடா மாளிகையின் தங்கப் புதையலுக்கு சரியான வாரிசுகள் தான் என நினைக்கும் சாண்டியாகோ மான்காடா, தனது குடும்ப பாரம்பரியத்தை மீட்க நினைக்கிறார். அதேநேரம் பல பில்லியன்கள் மதிப்புள்ள அந்த தங்கத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் சல்லிவன்  – நாதன் – க்ளோயி கூட்டணி. தங்களிடம் இருக்கும் துப்புகளைக் கொண்டு உலகின் மிக பழமையான மர்மங்கள் நிறைந்த அந்தப் புதையலை தேடிச் செல்கின்றனர். இந்த இரு குழுக்களும் நடக்கும் புதையல் போர் என்னானது? இரு தரப்பும் எப்படி புதையலை மீட்க போராடுகின்றனர். அவர்களின் வழியில் நண்பர்களும், நண்பர்களின் போர்வையில் துரோகிகளும் வருகிறார்கள். பல சவால்களையும், சாகசங்களையும் கடந்து இவர்கள் இருவரும் புதையலை எடுத்தார்களா என்பதே படத்தின் கதை.இதன் பின்னணியில் இருக்கும் சவால்கள் என்ன என்பதை அட்வென்சர் திரைப்படமாக கொடுத்திருப்பதே ‘அன்சார்டட்”.

தேவாலயத்திலிருந்து தொடங்கும் புதையல் வேட்டை பிரமமாண்ட கப்பல்களில் கண்டுபிடிப்பதில் முடிப்பது படத்தின் பெரும்பலம். க்ளைமேக்ஸில் வரும் பிரமாண்டக் காட்சிகளுக்கு மேலும் பிரமாண்டம் கடலுக்கு நடுவே இருக்கும் மலைக்குன்றுகளை இடிக்காமல் வானில் அந்தரத்தில் தொங்கும் இரண்டு கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு இடையே எல்லாம் புகுந்து தனியாகச் சாகசம் செய்கிறது ஒளிப்பதிவாளர் சுங்-{ஹன்-சுங்கின் (Chung-hoon Chung) கேமரா.விமான சண்டைக்காட்சி, கப்பல் பயணம், மலைக்குகைக்குள்ளே இருக்கும் இரண்டு கப்பல்களை வலை போட்டு மேலே தூக்கும் பிரமாண்ட ஹெலிகாப்டர்கள், தேவாலகத்தில் குறியீடுகளை கண்டுபிடித்து செல்லும் சாதுர்யம், விடாமல் துரத்தும் மான்காடா ஆட்கள், ஹெலிகாப்டரிலிருந்து சண்டையில் கிழே விழும் பெட்டிகளை பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கி உயிர் தப்பிப்பது என்று புதையலுக்காக மல்லுகட்டும் இரு குழுக்களின் சாகசங்களை திறம்பட படம் பிடித்து ஆச்சர்யத்தில் முழ்கடித்து விடுகிறார் ஒளிப்பதிவாளர் சுங்-{ஹன்-சுங் (Chung-hoon Chung).
ரமின் ஜவாடி ஆக்ஷன் இல்லாத காட்சிகளின் பின்னணியில் படம் நகர்வதற்கேற்றவாறு அட்வென்சர் சுவாரஸ்யத்தோடு பின்னணி இசையில் மிரள விட்டிருக்கிறார்.
சோனியின் புகழ்பெற்ற வீடியோ கேம் சீரிஸான ‘அன்சார்டட்” பெயரை மாற்றாமல் அதே கேரக்டர்களுடன் திரைக்கு விருந்தாக வந்துள்ளதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ லொக்கேஷன்களில் ஆக்ஷன் சீன்கள் படம்பிடிக்கப்பட்டு லாஜிக்களை மீறி விமான சண்டைக்காட்சி ரசிகர்களை உற்சாகமடைய செய்வதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் ரூபென் ஃப்ளெச்சர்.  இரண்டு மணிநேரப் படத்தில், முதல் பாதியை விட இரண்டாம் பாதியை க்@க்களை வைத்துப் புதையலைக் கண்டறியும் ஒரு கேம் போலவே வடிவமைத்து சாகசங்கள் நிறைந்த விறுவிறுப்பு குறையாமல் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் ரூபென் ஃப்ளெச்சர்.
தன் அண்ணனையும், கஷ்டப்பட்டு கண்டுபிடித்து தவற விட்ட தங்க புதையலையும் தேடி நாதன் மீண்டும் களமிறங்கும் நோக்கோடு படத்தை முடித்து இரண்டாம் பாகத்திற்கு வழி வகை செய்து உள்ளனர். கூடிய விரைவில் படத்தின் அடுத்த கட்டத்தை எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் வெளிவந்திருக்கும் ‘அன்சார்டட்’ மிளிர்கிறது.