அதிரடிக்கு தயாராகும் ‘கே.ஜி.எஃப். 2’ – படக்குழு வெளியிட்ட புகைப்படம்
ஏப்ரல் 14-ம் தேதி ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2’ படம் ரிலீஸ் ஆக உள்ளநிலையில், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீணா தாண்டன் டப்பிங் பேசியபோது எடுத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு, அதிரடிக்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளது.
பிரபல இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘கே.ஜி.எஃப் : சாப்டர் 1’. இந்தப் படத்திற்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. இந்தப்படத்தில் யஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் ஏறக்குறைய முடிந்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2’ திரைப்படம் ஜுலை 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தை திட்டமிட்டப்படி ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதற்கிடையில் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, ‘வலிமை’, ‘ஆர்ஆர்ஆர்’, ‘ராதே ஷ்யாம்’ என பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அடுத்தடுத்து ரிலீஸ் தேதியை அறிவித்து வருகின்றனர்.
இதனால் ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2’ படத்தை வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், ‘கே.ஜி.எஃப். : சாப்டர் 2’ படத்தில் ராமிகா சென் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரவீணா தாண்டன், டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படத்தை, உண்மையான அதிரடி அனுபவத்துக்கு தயாராகுங்கள் என்ற கேப்ஷனுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.
The Lady who puts the glamour even while announcing a death order. Our #RamikaSen can stretch her vocal cords to a different dimension. Always fun to work with n always at ease. Get ready for an immersive experience.#KGF2onApr14 #KGFChapter2 @TandonRaveena @prashanth_neel pic.twitter.com/02dJWXCMj8
— Hombale Films (@hombalefilms) February 8, 2022