அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் அஜித்தின் வலிமை முதலிடம் – விஜய்யின் மாஸ்டருக்கு 2வது இடம் : ட்விட்டர் இந்தியா பட்டியல்

0
24

அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்கில் அஜித்தின் வலிமை முதலிடம் – விஜய்யின் மாஸ்டருக்கு 2வது இடம் : ட்விட்டர் இந்தியா பட்டியல்

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் ஹேஷ்டேக்கில் ‘வலிமை’ முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர், கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து, இன்று 14-வது ஆண்டு விழாவை காண்கிறது. இதனையொட்டி ட்விட்டரில் இன்று ‘Hashtag Day’ கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான நாட்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ட்விட்டர் ஹேஷ்டேக் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில், முதலிடத்தை நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ ஹேஷ்டேக் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை நடிகர் விஜயின் ‘மாஸ்டர் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் ‘சர்க்காரு வரி பாட்டா’, 4-வது இடத்தில் அஜித்குமார், 5-வது இடத்தில் ‘தளபதி 65’ ஹேஷ்டேகுகள் உள்ளன.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். அதேபோல் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வலிமை ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.