‘அண்ணாத்த’ ரஜினியை சந்திக்க ஐதராபாத் சென்ற நயன்தாரா… வைரலாகும் புகைப்படம்

0
7

‘அண்ணாத்த’ ரஜினியை சந்திக்க ஐதராபாத் சென்ற நயன்தாரா… வைரலாகும் புகைப்படம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.

மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், ஏப்ரல் 8-ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று நடிகை நயன்தாராவும் தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார்.

இதனிடையே சமீபத்தில் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.