அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

0
10

அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்பட பலர் நடித்து வருகின்றனர். கொரோனாவால் பலமுறை தடைபட்ட படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. ரஜினி படப்பிடிப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.

இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிந்து ரஜினி சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசுகிறார் ரஜினி. அந்த வேலை முடிந்த பின், ஜுனில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா செல்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் வழக்கத்தை விட பல மடங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. படப்பிடிப்பில் பங்கேற்பவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் டப்பிங்குக்கும் இதே அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

நவம்பரில் தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்தே படத்தை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. டி.இமான் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.