அடுத்த சாட்டை திரை விமர்சனம் ரேட்டிங்

0

அடுத்த சாட்டை திரை விமர்சனம் ரேட்டிங்

அடுத்த சாட்டை படத்தில் கல்லூரி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் இடையேயான கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
தனியார் கல்லூரியில் முதல்வராக தம்பிராமையாவும், பேராசிரியராக சமுத்திரகனியும் இருக்கிறார்கள். கல்லூரியின் முதல்வரான சிங்கப்பெருமாளுக்கு (தம்பி ராமையா), ஆசிரியர்களுக்குள்ளான அரசியலால் தயாளனை (சமுத்திரக்கனி). கண்டாலே பிடிக்காது. காரணம், மாணவர்கள் நலன் கருதி சமுத்திரக்கனி செய்யும் செயல்கள், அவருக்குப் பிடிப்பதில்லை.ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வரும் அந்த கல்லூரியின் தவறுகளை சமுத்திரகனி சுட்டி காட்டி வருகிறார். இரண்டு சாதி மாணவர்கள் பெருவாரியாகப் பயிலும் அந்தக் கல்லூரியில், தங்கள் சாதியை அடையாளப்படுத்த இரண்டு விதமான நிறங்கள் கொண்ட கயிறுகளைக் கையில் கட்டிக் கொள்கின்றனர் மாணவர்கள். மாணவர்களுக்கிடையே ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வருகிறார் சமுத்திரகனி. மாணவர்களுக்கிடையே நிலவும் ஒழுங்கின்மை, ஒற்றுமையின்மை, அவர்களுக்குள் ஒளிந்து கிடக்கும் திறமை கண்டறிந்து, மாணவர்களுக்கிடையே இருக்கும் பிளவுகளையும் நீக்குகிறார்.சமுத்திரகனியின் செயலால் கோபமடையும் தம்பிராமையா, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார். இப்படி எல்லாப் பிரச்சினைகளையும், நியாயமான சில பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் துணையோடு தனியொரு மனிதனாய் சமுத்திரக்கனி எப்படி சமாளித்து தம்பிராமையாவின் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்கிறார்? கல்லூரி முதல்வர் தம்பிராமையா மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சமுத்திரகனி துடிப்பு மிக்க பேராசிரியராக தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார். ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார். படம் நிறைய கருத்துகளை வாரி இறைத்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தை ஏற்ற தம்பி ராமய்யா, நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நடிப்பின் மூலம் வழக்கம் போல் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

பியூனாக இருக்கும் ஜார்ஜ் , மாணவர்களாக நடித்திருக்கும் யுவன், ஸ்ரீPராம், அதுல்யா, கனிகா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நேர்மை சேர்த்திருக்கிறார்கள்.

நட்புக்காக சசிகுமார் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார்.

சமூகத்திற்கு தேவையான பல கருத்துகளை வசனங்கள் மற்றும் ராசாமதியின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரின் இசையும், யுகபாரதி வரிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

சாதிப் பிரச்னை மற்றும் கல்வியை காசுக்காக விற்கும் இந்த சமூகத்தில் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது போன்ற சமூக கருத்துக்களைக் கொண்டு 90 சதவீத படமும் அந்தக் கல்லூரி, அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டுமே நகர்கிறது. முதல் பாகத்தில் பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம், இரண்டாம் பாகத்தில் கல்லூரியை கதைக்களமாகக் கொண்டு, முத்தக்காட்சி, புகைப்பிடித்தல், மது அருந்துதல், கேலி செய்தல், ஆபாசம் போன்ற காட்சிகள் இல்லாமல் உணர்வுபூர்வமான க்ளைமாக்ஸ் அமைத்து சோஷியல் டிராமா படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.

மொத்தத்தில் சமுத்திரக்கனி மற்றும் பிரபுதிலக்;; இணைந்து தயாரித்துள்ள ‘அடுத்த சாட்டை” நம்மை கொஞ்சம் சிந்திக்கவும் செய்து, கொஞ்சம் சிரிக்கவும் செய்து, நிறைய அறிவுரையுடன் நெகிழ வைக்கும் சமூகத்திற்குண்டான ப(h)டம்.

நம்ம பார்வையில் ‘அடுத்த சாட்டை” படத்துக்கு 3 ஸ்டார் தரலாம்.