அடுத்த அவதாரம் எடுத்துள்ள அதிதி ஷங்கர் – படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

0
57

அடுத்த அவதாரம் எடுத்துள்ள அதிதி ஷங்கர் – படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

பிரபல இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், தெலுங்கு படம் ஒன்றில் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான ஷங்கர், தற்போது ராம் சரணை வைத்து தெலுங்கு படம் ஒன்றை, பிரம்மாண்ட பட்ஜெட்டில் இயக்கி வருகிறார். இவரின் இரண்டாவது மகளான அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து முடித்தநிலையில், அண்மையில் பட்டம் பெற்ற புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. மேலும், நடிகர் சூர்யா தயாரிப்பில், முத்தையாவின் இயக்கத்தில், கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ படத்தில், அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், நடனம், சங்கீதம் கற்றுள்ள அதிதி ஷங்கர், பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடிக்கும் ‘காணி’ படத்தில் ரோமியோ ஜூலியட் என்ற பாடலை பாடியுள்ளார். தமன் இசையில், அதிதி ஷங்கர் பாடியுள்ள இந்தப்பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் ஷங்கர் தனது ‘பாய்ஸ்’ படத்தில் இசையமைப்பாளர் தமனை நடிகராக அறிமுகப்படுத்தினார். மேலும், இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படத்தில் தான், தமன் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கரை, தமன் தனது இசையில் பாடகியாக அறிமுகப்படுத்திகிறார். மேலும், கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘கொரோனா குமார்’ படத்தில், அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.