அடிதூள்…! ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’?

0

அடிதூள்…! ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்ததும் வெளிவரும் முதல் படம் விஜய்யின் ‘மாஸ்டர்’?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், சேத்தன், ஸ்ரீமன், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகவும், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த படம் ஏப்ரல் 9ம் தேதியே உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக ரிலீஸ் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இன்னும் 2 வாரங்களில் ஊரடங்கு நிபந்தனைகள் முழுமையாக தளர்த்தப்படும் என்றும், சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி கிடைத்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் படம் பார்க்க வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுமக்களின் பயத்தைப்போக்க என்ன செய்யலாம்? என்று தியேட்டர் அதிபர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்தை முதன்முதலாக திரையிட்டால் மட்டுமே ரசிகர்களும், பொதுமக்களும் அச்சம் இல்லாமல் படம் பார்க்க வருவார்கள் என்று தியேட்டர் அதிபர்கள் கணக்குப் போடுகின்றனர்.

திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் எண்ணி வருகின்றனர்.

மாஸ்டர் படம் ரிலீஸ் செய்தால் தான் மக்களிடையே அச்சத்தைப் போக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் பிறகுதான் தியேட்டருக்கு பெரிய கூட்டம் வரும் என கணக்குப் போடுகின்றனர்.

இந்த நிலையில் ஊரடங்கு முடிந்ததும் முதல் படமாக தளபதி விஜயின் மாஸ்டர்  படத்தை திரையிடுவது என்று தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.