‘அடிச்சு பறக்கவிடுமா’: ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் தேவாவுடன் இணைந்து பாடி தெறிக்க விட்டுள்ளார் லாஸ்லியா

0
6

‘அடிச்சு பறக்கவிடுமா’: ‘பிரண்ட்ஷிப்’ படத்தில் தேவாவுடன் இணைந்து பாடி தெறிக்க விட்டுள்ளார் லாஸ்லியா

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதன்முறையாக ஹீரோவாக தமிழில் ’பிரண்ட்ஷிப்’ படத்தில் அறிமுகமாகியுள்ளார். ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் கவனம் ஈர்த்த லாஸ்லியா ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் கவனம் ஈர்த்த நிலையில், நடிகை லாஸ்லியா இப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளையொட்டி் முதல் பாடலாக வெளிவந்துள்ள ‘அடிச்சு பறக்கவிடுமா’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் லாஸ்லியா. ’சென்னை சூப்பர் கிங்ஸ்’ கிரி்க்கெட் அணியின் ப்ரொமோ பாடல் போலவே இருக்கும், இப்பாடலை தெறிக்க விட்டிருக்கிறார்கள் தேவாவும் லாஸ்லியாவும்.