அஜித்தின் AK61 பட வேலை தொடக்கம் – போனி கபூர் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

0
36

அஜித்தின் AK61 பட வேலை தொடக்கம் – போனி கபூர் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

அஜித்தின் அடுத்தப்படமான AK61-ற்கான தயாரிப்பு வேலைகள் தொடங்கியிருப்பதாக, தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அஜித்தின் மாதிரி தோற்ற புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார்.

அஜித் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் புதிய படத்தை தொடங்க உள்ளார். இதை தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிக்கவிருக்கிறார். அஜித் – வினோத் – போனி கபூர் இணையும் மூன்றாவது படமாக இது உருவாகவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பூஜையுடன் தொடங்க உள்ளது.

இந்நிலையில் அஜித்தின் 61-வது படத்திற்கான வேலைகள் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டு, அஜித்தின் மாதிரி தோற்றபடம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர். முழுக்க முழுக்க நரைத்த முடி, மீசை மற்றும் தாடியுடன் அந்தத் தோற்றம் உள்ளது.