அஜித்தின் வலிமை பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

0
9

அஜித்தின் வலிமை பொங்கலுக்கு தியேட்டரில் ரிலீஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. அஜித்துடன் ஹியூஉமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எடிட்டராக விஜய் வேலுகுட்டி, சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக கே.கதிர், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில், வலிமை திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வலிமை படத்தின் முதல்பார்வை நாளை வெளியாகும் நிலையில், படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.