அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு முன்பதிவு துவங்கியது. எந்த நாட்டில் தெரியுமா?

0
57

அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு முன்பதிவு துவங்கியது. எந்த நாட்டில் தெரியுமா?

உலக அளவில் கவனம் ஈர்த்த தமிழ் நட்சத்திரங்களில் அஜித்தும் ஒருவர். அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, அஜித்தின் ‘வலிமை’ முன்பதிவு ஜப்பானில் தொடங்கியுள்ளது. ‘வலிமை’ படத்திற்கான முன்பதிவுகள் இந்தியாவில் தொடங்கும் முன்பே, ஜப்பானில் படத்திற்கான முன்பதிவு தொடங்கியிருப்பது உலகம் முழுவதும் அஜித் படத்திற்கான எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.

‘வலிமை’ திரைப்படம் பல வெளிநாடுகளில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் அஜித்தின் மிகப்பெரிய வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்தை பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டராக மாற்றும் முயற்சியில் உள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்க, கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், ராஜ் ஐயப்பா, சுமித்ரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். அதிக ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட ‘வலிமை’ படத்தில், அஜித் பல ஆபத்தான ஸ்டண்ட் மற்றும் ரேஸ் காட்சிகளை தானே செய்து ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.  உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்தப் படத்தின் ட்ரெயிலர், சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.