ஃபில்டர் கோல்டு விமர்சனம் : திருநங்கைகளின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பிரதிபலிக்கும் மாய கண்ணாடி

0
41

ஃபில்டர் கோல்டு விமர்சனம் : திருநங்கைகளின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பிரதிபலிக்கும் மாய கண்ணாடி

திருநங்கைகளான விஜி, டோரா, சாந்தி நட்புடன் பழகுகிறார்கள். இதில் விஜி ஆச்சாரி என்பவரிடம் அடியாள் போல் வேலை செய்கிறார். ஆச்சாரி கை காட்டும் நபர்களை கொலை செய்வது, கொள்ளை அடிப்பது என்று ஒரு பக்கம் செய்தாலும், மறுபுறம் திருநங்கைகளுக்கு ஆதரவு கரம் நீட்டுபவராக விளங்குகிறார்.டோரா விஜியுடன் தங்கி அவருக்கு உதவியாக இருக்கிறார். எதிர்பாராதவிதமாக சாந்தி கொலை செய்யப்பட, அதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடித்து போட்டும் தள்ளுகிறார். இதனால் போலீஸ் வலை வீசி தேட இருவரும் தலைமறைவாகின்றனர். இதற்கிடையே காதல் விவகாரத்தால் டோராவும் கொலை செய்யப்படுகிறார். தனிநபராக விஜி தன் தோழியின் இறப்புக்கு காரணமானவர்களை தேடி கண்டுபிடித்து கொன்றாரா? அல்லது பழைய வாழ்க்கையை மறந்து புது வாழ்க்கைக்கு திரும்பினாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

முக்கிய கதாபாத்திரத்தில் விஜி என்கிற விஜயபாஸ்கர் துணிச்சலுடன் அசால்டாக நடித்து, திருநங்கையாக வாழ்ந்தும் காட்டியிருக்கிறார். நினைக்கும் போதேல்லாம் ஃபில்டர் கோல்ட் சிகரெட், பைக்கில் கிளம்பி அதகளம் காட்டி, கொலை செய்து, பின்னர் மது விருந்து என்று பக்கா தாதாவாக வலம் வந்து அதிர்ச்சியூட்டுகிறார். தெறிக்கவிடுகிறார். பாராட்டுக்கள்.

டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவஇலங்கோ, நட்ராஜ், சாய் சதீஷ், வல்லவன், ஷீதல் நாயக் மற்றும் பலர்  படத்தின் கதைக்களத்திற்கேற்ற கதாபாத்திரங்களில் மின்னுகின்றனர்.

இசை- ஹ_மர் எழிலன், ஒளிப்பதிவு-எம்.பரணிகுமார், எடிட்டிங்-கிங் டேவிட், பாடல்கள்-சு.ப.முத்துக்குமார், நடனம்-சிவசங்கர் குறை சொல்லமுடியாத பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

திருநங்ககைகளை திரைக்கதையில் வித்தியாசத்தைகாட்டி, எதிர்பாராத சம்பவங்கள், அதிர்ச்சி தரும் கொலைகள், பழிக்கு பழி, திருநங்கைகளின் சம்ரதாயங்கள், இறந்தால் சடங்குகள் என்று அவர்களின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் காட்சியிருப்பதே ஆச்சர்யம். வன்முறையை குறைத்து வசனத்தில் ஆபாசத்தை கலக்காமல் இருந்திருந்தால் அனைவரும் பார்த்து பிரமித்திருப்பார்கள். பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு சிறப்பாக எடுத்து, புரியும்படி, தெளிவாக இயக்கியிருப்பதில் இயக்குனர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்துக்கள். புதுவித அனுபவத்தை கொடுத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. படம் முழுவதும் திருநங்கையின் வாழ்க்கையை சித்தரித்து சமூக பிரச்னையை கையிலெடுத்து காதலை நயம்பட திறம்பட அழகுற பிரதிபலிப்பதோடு, அவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து, லோன், ஒட்டுனர் உரிமம் என்று அடிப்படை  உரிமை கூட பல போராட்டங்களுக்கு பிறகு காலதாமதமாக நடைமுறை படுத்தப்படுவதும், இதனால் அவர்களுக்கு எந்த உரிமையும் வேண்டாம் வாழவிட்டால் போதும் என்ற நிலைமைக்கு தள்ளப்படுவதே படத்தின் ஹைலைட்ஸ். தன்னால் முடிந்த வரை திருநங்கைகளின் பிரச்சினைகளை சொல்லி உரிமைக்கு குரல் கொடுத்து ஆறுதல் அடைந்திருக்கிறார் இயக்குனர் விஜயபாஸ்கர் என்றே சொல்லலாம். வெல்டன்.

ஆர்.எம்.நானு தயாரிப்பில் ஃபில்டர் கோல்டு படம் திருநங்கைகளின் வாழ்க்கையை வித்தியாசமான கோணத்தில் பிரதிபலிக்கும் மாய கண்ணாடி.