தேசிய நுழைவு ( NTA ) கூட்டு நுழைவு தேர்வு ( JEE ): முதல் இடத்தை பிடித்த ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள்

0
34

தேசிய நுழைவு ( NTA ) கூட்டு நுழைவு தேர்வு ( JEE ): முதல் இடத்தை பிடித்த ஸ்ரீ சைதன்யா பள்ளி மாணவர்கள்

தேசிய நுழைவு ( NTA ) கூட்டு நுழைவு தேர்வு ( JEE ) மெயின்ஸ் தனது முதன்மை கட்ட முடிகளை 24 மார்ச், 2021 அன்று வெளியிட்டுள்ளது. இதில் ஸ்ரீ சைதன்யா பள்ளி, தமிழ்நாடு, மீண்டுமொருமுறை முதல் இடத்தை பிடித்து வெற்றி முழக்கமிடுகிறது.

ஸ்ரீ சைதன்யா மேல்நிலை பள்ளி, ஓசூரை சேர்ந்த மாணவர் S. தருண் தியானிஷ் 99.9934203 சதவிகிதம் பெற்று தேசிய அளவில் முதலாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் கணிதம், இயற்பியல், வேதியல் ஆகிய பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் முறையே 99.7 சதவிகிதம், 100 சதவிகிதம் ஆகும்.

ஸ்ரீ சைதன்யா மேல்நிலை பள்ளி , சென்னை , நொளம்பூர் கிளை சேர்ந்த மாணவர் சித்தார்த் ஆச்சார்யா 99.9592825 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். கணிதம் – 99.9282086 சதவிகிதம்,
இயற்பியல் – 99.6528299 சதவிகிதம் , வேதியல் – 99.96571167 சதவிகிதம்.

இதுமட்டுமின்றி, இன்னும் பல மாணவர்கள் 99%க்கும் மேலான மதிப்பெண் பெற்று மிகச்சிறந்த முறையில் சி பெற்றனர். மேலும் ஒரு மாணவர் இயற்பியலும் , வேதியலும் 100 சதவிகிதம் பெற்றுள்ளார்.

இத்தனை பெரிய வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளையும் , ஸ்ரீ சைதன்யா பள்ளி , இயக்குனர் திருமதி. சுஷ்மா போபண்ணா அவர்கள் பாராட்டியுள்ளார். அத்துடன் அவர் இந்த மாணவர்களின் பெற்றோர் அனைவரையும் தன் மனமார்ந்த பாராட்டுகளையும், நன்றியும் தெரிவித்தார்.

இது அணைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியும், உற்சாககமும் அளித்து ஊக்கப்படுத்துள்ளது.