கூடுதல் கட்டணம் இல்லை – அசத்தல் ஆப் அறிமுகம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள்

0
95

கூடுதல் கட்டணம் இல்லை – அசத்தல் ஆப் அறிமுகம் செய்த ஆட்டோ ஓட்டுனர்கள்

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய Sudesi App தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த செயலி மூலம் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் ஆட்டோ முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள முடியும்.

Sudesi App-ஐ அறிமுகம் செய்வதற்காக சென்னையில் நடைபெற்ற அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு Sudesi App பற்றி பேசினார்கள். Sudesi App- ன் CEO கோபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதன் பிறகு சிறப்பு விருந்தினர்கள் ஒன்றினைந்து Sudesi App-ஐ அறிமுகம் செய்தனர். திருச்சியில் 800 ஓட்டுநர்கள் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுடன் இயங்கி கொண்டிருக்கும் Sudesi App சென்னையில் 10.12.2021 முதல் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். அதன்பின் அடுத்த 5 நாட்களில் முதல் சேவையை தொடங்க இருக்கிறது.

கால் டாக்சி மற்றும் வாடகை ஆட்டோ சேவைகளை வழங்குவதில் ஓலா, உபெர் போன்ற செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதுபோன்ற செயலிகள் வெளியானது முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகவும் பாதிக்கபட்டு வருகிறார்கள்.

இதன் காரணமாக Sudesi App-ஐ உருவாக்கும் முன், சுதந்திரம் என்ற பெயரில் டெலிகிராம் அக்கவுண்ட் மற்றும் இலவச தொலைபேசி எண் மூலமாக இந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சரியான கட்டணத்தில் சேவை வழங்க துவங்கினர். பின் சுதந்திர மீட்டர் ஆட்டோ என்ற பெயரை மாற்றி சுதேசி என்ற பெயரில் செயலியை உருவாக்கி் ஆட்டோ மற்றும் டாக்சி இரண்டு சேவையும் தருகின்றனர்.