உள்ளூர் கடைகளும் சிறிய நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக மாற உள்ளன

0
87

உள்ளூர் கடைகளும் சிறிய நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக மாற உள்ளன

சென்னை, மார்ச் 29, 2022

தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு திட்டத்தின் கீழ், 2022-க்குள் 10 மில்லியன் வைஃபை தொடர்பு இடங்களை உருவாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு வசதியாக பிஎம்-வாணி (பிரதமரின் வைஃபை வலைப்பின்னலை எளிதாக்கும் டிஜிட்டல் முறை) என்ற  கட்டமைப்புக்கு 2020 டிசம்பர் 9 அன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

வணிகம் செய்வதை எளிதாக்கவும், ஊக்கப்படுத்தவும், உள்ளூர்  கடைகளும், சிறு நிறுவனங்களும் வைஃபை வசதி வழங்குவதாக மாற உள்ளன. கடைக்கோடி பகுதியில் உள்ள மக்களுக்கு வைஃபை வசதி வழங்குவோருக்கு உரிமம், பதிவு தேவையில்லை; தொலைதகவல் தொடர்புத் துறைக்கு கட்டணம் எதுவும் செலுத்தவேண்டிய அவசியமில்லை என்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையில், கடைக்கோடி பகுதியில் உள்ள மக்களுக்கு வைஃபை வசதி வழங்குவோரை ஒருங்கிணைக்கும் பொதுத் தரவு அலுவலக ஒருங்கிணைப்பாளர்களும் உரிமம் பெறத் தேவையில்லை. இந்த பொதுத் தரவு அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் பதிவு மட்டும் செய்தால் போதுமானது  இவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது. விண்ணப்பங்கள் பெறப்பட்ட 7 வேலைநாட்களுக்குள் பதிவு நடைமுறை பூர்த்தி செய்யப்படும்.

பிஎம் வாணி திட்டத்தை அமலாக்குகின்ற மற்றும் பரவலாக்குகின்ற அனைவருக்கும் தொலைதகவல்  தொடர்புத்துறை உதவி செய்யும். மேலும் விவரங்களை https://pmwani.gov.in/wani என்ற இணையதளத்தில் காணலாம். கூடுதல் தகவலுக்கு 044 – 2825 1066 / 0422-2451144 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது [email protected] / [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.