வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்ற அதிக அபாய இதய அறுவை சிகிச்சை 68 வயது விவசாயியின் உயிரைக் காப்பாற்றியது
சென்னை: சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையில் நடைபெற்ற சவாலான ரீடூ தையலற்ற பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை (Redo Sutureless Aortic Valve Replacement) சிகிச்சைக்குப் பின் 68 வயது விவசாயிக்கு புத்துயிர் கிடைத்தது. கால்சியம் படிந்த பெருந்தமனி தடுக்கிதழ் காரணமாகக், கடுமைமையான பெருந்தமனி இரத்த நாளக் குறுக்கம் (இதயத்திலிருந்து பெருந்தமனி மற்றும் உடலின் ஏனைய பாகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்ட பாதிப்பு) ஏற்பட்டதால், இவர் ஏற்கனவே 2007ஆம் ஆண்டு பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். நோயாளியின் உயிரைக் காப்பாற்ற அறுவை சிகிச்சை மூலம் இவருக்கு உயிரி செயற்கைத் தடுக்கிதழ் பொருத்தப்பட்டது. காலப்போக்கில், கால்ஷியம் அதிகம் சேர்ந்ததால் தடுக்கிதழ் சிதைந்து குறுகியதால், உடனடி சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலை ஏற்பட்டது.
நோயாளி மூச்சு விடச் சிரமப்படவே, 2022 நவம்பரில், சென்னை வடபழநி ஃபோர்டிஸ் மருத்துவமனையின் இதயம் & நுரையீரல் மாற்றும் அறுவை சிகிச்ச்சை பிரிவு தலைவர் – சிடிவிஎஸ் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியின் கண்காணிப்பில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், காரை படிந்த பெருந்தமனி இரத்த நாளக் குறுக்கம் மற்றும் இதயத்தின் பெருந்தமனி தடுக்கிதழ் இறுக்கமாக மூடிக் கொள்ளாமை ஆகியவை உறுதி செய்யப்பட்டன. இதன் காரணமசக இதயத்தின் இடது கீழறையிலிருந்து ஏற்றப்பட்ட குருதி பின்னோக்கிக் கசியத் தொடங்கியது.
அறுவை சிகிச்சை விவரங்களை டாக்டர் கோவினி விளக்குகையில் ‘நோயாளிக்கான பல்வேறு சிகிச்சை வாய்ப்புகளை ஆய்வு செய்தோம். டிஏவிஐ (TAVI) (செருகு வடிகுழாய் பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை அதாவது சிதைந்த தடுக்கிதழை அகற்றாமல் அதற்குள்ளேயே புதிய தடுக்கிதழைச் சொருகும்) அறுவை சிகிச்சையும் பரிசீலிக்கப்பட்டது. டிரான்ஸ் ஈஸோஃபேகியல் எக்கோ பரிசோதனையின் போது மருத்துவர் குழு இன்னொரு சவாலைச் சந்தித்தது. இயல்பான நிலையில் 21மிமி இருக்க வேண்டிய நோயாளியின் பெருந்தமனி தடுக்கிதழ் 20மிமிக்கும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரிவடையும் போது பெருந்தமனி தடுக்கிதழ் உறுதி பலவீனமோ, சேதமோ ஏற்படும் அபாயம் நிகழலாம். எனவே அபாயம் அடையும் சாத்தியங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு ரெடோ தையலற்ற பெருந்தமனி தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்தோம்’ என்றார்.
டாக்டர் கோவினி மேலும் தொடர்கையில் ‘சேதமடைந்த தடுக்கிதழை அகற்ற ஸ்டெர்னோடொமி அறுவை சிகிச்சை மூலம் நோயாளியின் மார்பக எலும்பு பிரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தடுக்கிதழுக்குப் பதிலாக 21மிமி உயிரி செயற்கை / தையலற்ற தடுக்கிதழ் பொருத்தப்பட்டது. புதிய தடுக்கிதழைப் பொருத்தித் தைக்க வேண்டியதில்லை என்பதாலும், அறுவை சிகிச்சை அதிக சிக்கலில்லை என்பதாலும், குணமடையும் காலம் விரைவு என்பதாலும், வயதான அல்லது கூட்டு நோய்கள் உள்ள நோயாளிகளுக்குத் தையலற்ற தடுக்கிதழ் மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும். தையலற்ற தடுக்கிதழ் பொருத்த 3 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே தேவைப்படும். குருதி மாற்றம், சிறுநீரகக் கோளாறு, மார்பக மேலறை நுண்ணார்ச் சுருக்க நடுக்கம், நீண்ட காலம் செயற்கைச் சுவாஸத்தில் வைத்திருத்தல் உள்ளிட்ட அறுவை சிகிச்சைக்குப் பிந்திய சிக்கலகள் கணிசமாக குறையும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி படிப்படியாக நன்கு குணமடைந்தார்’ என்றார்.
சென்னை ஃபோர்டிஸ் மருத்துவமனை எஸ்பியூ தலைவர் வேங்கட பணீதர் நெல்லுரி பேசுகையில் ‘நோயாளியின் மருத்துவ நிலை மற்றும் வயதைக் கருத்தில் கொள்கையில், இந்த அறுவை சிகிச்சை உண்மையிலேயே சவசலானதுதான். இருப்பினும், உரிய நேரத்தில் நோயாளியை எங்கள் நிபுணர் குழு பரிசோதித்துத் தேவையான சிகிச்சையை வழங்கியதால் அவருக்குப் புதிய வாழ்க்கை கிடைத்தது. நோயாளி விரைவில் குணமடைய உதவிய டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி மற்றும் அவாது இதய அறுவை சிகிச்சைக் குழு நிபுணர்கள், ஐசியு நிபுணர்கள், இதய மயக்க மருந்து நிபுணர்கள், செவிலியர்கள் ஆகியோர் குறித்து நாங்கள் பெருமைப்படுவதுடன், அனைவருக்கும் மனதார நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.