முழு வீச்சில் தி.மு.க அரசின் கோவிட் தடுப்பு பணி: இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்தது ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள்!

0
11

முழு வீச்சில் தி.மு.க அரசின் கோவிட் தடுப்பு பணி:

இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் சென்னை வந்தடைந்தது ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள்!

ஆக்ஜிசன் தயாரிக்கும் 20 கருவிகள் இந்திய விமானப்படை விமானத்தின் மூலம் நாக்பூரிலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டன. திரவ ஆக்ஜிசனை ஏற்றி வருவதற்காக 2 டேங்கா் லாரிகள் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னையிலிருந்து புவனேஸ்வருக்கு அனுப்பப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆக்ஜிசன் தேவைகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து தமிழக அரசு ஆக்ஜிசன் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆக்ஜிசன் உற்பத்தி செய்யும் கருவிகள் பெருமளவு தமிழ்நாட்டிற்கு இறக்குமதியாகுகின்றன.

அதோடு தற்போது இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள் கொண்டு வரப்படுகின்றன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் 20 ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து சோ்ந்தது. விமான நிலைய அதிகாரிகள் அவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

அதைப்போல் திரவ ஆக்ஜிசனை ஏற்றிக்கொண்டு வருவதற்காக 2 டேங்கா் லாரிகளை ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.