மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?

0
53

மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை?

‘மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சீன நிறுவனமான ஷாவ்மி (xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களில் சென்னையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றுமதி, இறக்குமதியை கையாள்வதில் சேவியர் பிரிட்டோவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.